குஜராத் மாநிலம் வதோரா கரோலியபக் என்னும் பகுதியில் அதிவேகமாக சொகுசு கார் வந்தது. இந்த நிலையில் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து 2 இரு சக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மதுபோதையில் காரை ஓட்டி வந்த வாலிபர் காரில் இருந்து கீழே இறங்கி ஓம் நமசிவாய என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.