
செங்கல்பட்டு மாவட்டம் அகிலி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கயல்விழி 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த கயல்விழி இரவு முழுவதும் படித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இதனால் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக கயல்விழியின் தாய் அதிகாலை 4 மணிக்கு தனது மகளின் அறை கதவை தட்டியுள்ளார்.
பலமுறை தட்டிய போதும் அறை கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கயல்விழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கயல்விழியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடந்திய முதற்கட்ட விசாரணையில் நீட் தேர்வு அச்சத்தால் கயல்விழி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.