ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பூம் மாவட்டத்தை சேர்ந்த ஷில்பா முகர்ஜி (34), அங்குள்ள சுகாதார மையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி அந்த நபருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். இதை அறிந்த கணவர் சாஹேப் முகர்ஜி (38), மனைவியை பலமுறை கண்டித்திருந்தாலும், ஷில்பா அதை அலட்சியமாக எடுத்துக்கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு இதே விஷயம் குறித்து மீண்டும் கணவன்-மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த சாஹேப், மனைவியை கட்டையால் தலையில் தாக்கியதோடு, கழுத்தை நெரித்துக் கொன்றார். பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியேறி அருகிலுள்ள தண்டவாளத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து விரைந்த போலீசார், சம்பவ இடத்திலிருந்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், திருமணத்தை மீறிய உறவால் உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளதால், உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.