
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக குரங்குகளின் வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் வைரலாகி வருகின்றன. குரங்குகள் பல மிருகங்களிடம் சண்டை இடுவதை அடிக்கடி பார்த்திருப்போம்.
குறிப்பாக குரங்குகளுக்கும் நாய்களுக்கும் இடையே நடக்கும் சண்டைகள் பலமுறை இணையத்தில் வீடியோவாக வைரல் ஆகி வரும். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் குரங்கும் இரண்டு நாய்களுக்கும் இடையே நடக்கும் வேடிக்கையான விஷயங்களை பார்த்தால் கட்டாயம் சிரிப்பு வந்துவிடும். குரங்கு நாய்களுடன் விளையாடுவது மட்டுமல்லாமல் அவற்றை வம்புக்கும் இழுப்பது இன்னும் வேடிக்கையாக உள்ளது. தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.