ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 77 வேட்பாளர்களுக்கும் சின்னங்களை தேர்தல் அலுவலர் சிவகுமார் ஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து 49 சுயேட்சைகள், 25 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தேசிய மாநில கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் வழங்கப்பட்டுள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓர் அணியில் இணைவோம். இபிஎஸ்யிடம் இருக்கும்போது இரட்டை இலை அதன் செல்வாக்கினை இழந்து வருகிறது. வருங்காலத்தில் அந்த சின்னத்தை செல்வாக்கு உள்ள சின்னமாக மாற்ற காலம் வரும். இபிஎஸ் உடன் என்றைக்கும் இணையமாட்டோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.