
பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பெண் ஒருவரை சில நபர்கள் சூழ்ந்து கொண்டு துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் சில நபர்களால் சூழப்பட்டு இருப்பதையும் அவர்களிடமிருந்து அவர் மீள்வதற்காக போராடுவதும் போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இதைத் தொடர்ந்து அதில் அந்த பெண்ணை சிலர் காப்பாற்ற முயன்ற போதிலும் அவர் கடுமையாக துன்புறுத்தப்படுவதும் போன்ற காட்சிகள் இருந்துள்ளது.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் எந்த இடத்தில் நடைபெற்றது என்பது தெரியவில்லை என்றாலும் சுதந்திர தினத்தன்று நடந்தது என வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவை பார்த்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதை குறித்த கவலை தெரிவித்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு அவர்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதற்க்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
اِس قوم کا کیا علاج ہے ؟
رپورٹس کے مطابق مینار پاکستان پر جشنِ آزادی کے مناظر pic.twitter.com/jYPbHqAbXf
— Hasan Shabbir (@hasanshabbirr) August 16, 2024
“>