ரோமியோ பட நிகழ்ச்சியில் ஜீசஸ்சும் மது குடித்தார் என்று நடிகர் விஜய் ஆண்டனி பேசியது சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள விஜய் ஆண்டனி, திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல 2000 வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்தது தான். தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறினேன்.

யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது என்று விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.