வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுமியை ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக புதர் பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன், இளமுதன், சின்ராஜ் ஆகியோர் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அதன் பின்பு இது குறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அந்த 3 வாலிபர்களும் சித்தூரில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விரைந்து சென்று சித்தூரில் பதுங்கியிருந்த 3 பேரையும் கைது செய்து, அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.