சமூக வலைதளங்களில் தற்போது ஒரு இளைஞரின் வியக்கத்தக்க திறமை குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு சிறிய பேக்கரியில் பணிபுரியும் அந்த இளைஞர், வழக்கமாக மெஷின்கள் செய்யும் வேலையைத் தனது கைகளாலேயே மிகக் குறுகிய காலத்தில் செய்து முடிக்கிறார்.
மேலும் வெறும் 11 வினாடிகளில், மாவு மற்றும் தண்ணீரைச் சேர்த்து மிக மென்மையான பதத்திற்குப் பிசைந்து அவர் காட்டும் வேகம் பார்ப்பவர்களை வாயடைக்க வைத்துள்ளது. எந்தவொரு நவீன இயந்திரத்தின் உதவியும் இன்றி, அவர் காட்டும் இந்தத் துல்லியம் மற்றும் வேகம் இணையவாசிகளிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
The moment when a young man working at a pastry shop turns water and flour into dough in seconds without using a machine…
— Tansu Yegen (@TansuYegen) March 19, 2026
“>
இந்த வீடியோவை உன்னிப்பாகக் கவனிக்கும்போது, அந்த இளைஞரின் தன்னம்பிக்கையும், பயிற்சியும் தெளிவாகத் தெரிகிறது. மாவின் சரியான பதம், தேவைப்படும் தண்ணீரின் அளவு என அனைத்தையும் அவர் விரல் நுனியில் வைத்துள்ளார். இது வெறும் வேலையாகத் தெரியாமல், ஒரு கலை நயத்துடன் கூடிய ஒரு செயலாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இயந்திரங்களால் மட்டுமே இவ்வளவு வேகமாகச் செய்ய முடியும் என்கிற எண்ணத்தை மாற்றி, மனித உழைப்பும் தொடர் பயிற்சியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அந்த இளைஞர் நிரூபித்துக் காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது மில்லியன் கணக்கான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.
