100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை சோனா தற்போது இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். இவர் மிருகம், குசேலன், குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு, யாமிருக்க பயமே உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை சோனா, முன்பு தனது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்க திட்டமிட்டிருந்தார்.

தற்போது அதில், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் Smoke என்ற பெயரில் வெப் சீரிஸாக இயக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.