ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இம்ரான் கானை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இஸ்லாமாமபாத் முழுவதும் 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள அச்சத்தில் உள்ளனர். மேலும், இது கலவரமாக மாற வாய்ப்புள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.