ஐபிஎல் அணிகள் ஒவ்வொரு அணியும் தாங்கள் தங்க வைத்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதிக தொகைக்கு தென்னாப்பிரிக்க வீரர் ஹென்றிச் கிளாசன் 23 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் ‌ சன்ரைசர்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார். இவர்தான் ஐபிஎல் தொடரில் மிக அதிக தொகைக்கு தக்க வைக்கப்பட்ட வீரர் ஆவார்.

இதேபோன்று இந்திய வீரரான விராட் கோலி 21 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். இந்திய வீரர்களில் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். மேலும் ஆர்.சி.பி அணியில் மீண்டும் விராட் கோலி விளையாட இருக்கிறார். இதே போன்று ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தாங்கள் தங்கள் அணியில் பங்கேற்கும் வீரர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளது.