அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வு குழுவுக்கு மறைமுக பதிலடியை விராட் கோலி கொடுத்துள்ளார். நேற்று ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு பேசிய விராட் கோலி, இப்போது என்னிடம் அதே திறமை இருப்பதாக நான் யூகிக்கிறேன். டி20 கிரிக்கெட் விளம்பரத்திற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இப்போது என் பெயர் இணைக்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். கடந்த இரண்டு மாதங்கள் சாதாரணமாக என்னை நானே உணர வாய்ப்பு கிடைத்தது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.