வாகனம் ஓட்டுபவர்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது மிக மிக அவசியம். அவ்வாறு கடைபிடிக்கவிட்டால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்தவகையில்  வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் மது போதையில் வாகனம் ஓட்டினால் தற்போது 10,000 அபராதமாக விதிக்கப்படுவதாகவும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னையில் கடந்த 5 மாதங்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 13,638 வழக்குகளில் 14.10 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது