
பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா திமுக கட்சியை விமர்சித்த ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் திமுகவை 6 முறை ஆட்சியில் அமர்த்திய தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவோ, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவோ, தமிழகத்தின் வளர்ச்சிக்காகவோ எதையும் செய்யாமல் (தி)ருக்குவளை (மு)த்துவேலர் (க)ருணாநிதி குடும்பத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே ஆட்சி செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடலோ என்று பதிவிட்டுள்ளார்.
அவர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரினை மாற்றி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் திமுகவுக்கு புது பெயர் வைத்து விமர்சித்துள்ளது திமுகவின் ரத்தங்கள் மற்றும் உடன்பிறப்புகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவை 6 முறை ஆட்சியிலே அமர்த்திய தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவோ,
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவோ, தமிழகத்தின் வளர்ச்சிக்காகவோ எதையுமே செய்யாமல்..!!(தி)ருக்குவளை (மு)த்துவேலர் (க)ருணாநிதி குடும்பத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே ஆட்சி செய்வதற்குப் பெயர் தான் …
திராவிட மாடலோ?…
— H Raja (@HRajaBJP) February 7, 2025