பொதுவாக பள்ளி கல்லூரிகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களில் ஒரு சிலர் மட்டும்தான் மாணவர்கள் மனதில் தங்களுக்கு என தனி இடத்தை பிடித்து தனித்துவமாக பாடம் நடத்துவார்கள். அந்த வகையில் ஒரு கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர் தனக்கே உரிய பாணியில் தலைகீழாக நின்று பாடம் நடத்தி கவனத்தை ஈர்த்துள்ளார்.

அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு கல்வி நிறுவனத்தில் இயற்பியல் ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பாடம் நடத்தும் போது தலைகீழாக நின்று வேதியியல் பாடத்தை நடத்தியுள்ளார். இவர் தலைகீழாக நின்று தன் உடம்பை அசைத்து பாடத்தை அற்புதமாக மாணவர்களுக்கு விவரிக்கிறார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் அந்த ஆசிரியர்களை பாராட்டி வருகிறார்கள்.