பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் மாவட்டத்தில் பிரியா குமார் (16) என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி 10-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது 10 குரங்குகள் சிறுமியை சூழ்ந்து கொண்டது. இதனால் அந்த சிறுமி மாடியில் இருந்து பயந்து ஓடிய நிலையில் குரங்குகள் சூழ்ந்து கொண்டு மாணவியை தாக்கி மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டது. மேலும் இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.