மதுரையில் இருந்து கோவை நோக்கி செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தின் கண்டக்டராக சிவசண்முகம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சிவசண்முகம் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை கூறியுள்ளார். அதாவது, அரசு போக்குவரத்து சேவையை தேர்வு செய்து தங்களோடு பயணிக்க வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றி. நல்ல பேருந்து வசதியை அரசு நமக்கெல்லாம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

அந்த பேருந்தை தூய்மையாகவும், பழுது ஏற்படுத்தாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் பொறுப்பு தான். ஒரு கண்டக்டர் இப்படியெல்லாம் சொல்கிறார் என யாரும் வருத்தப்பட வேண்டாம். சாப்பிட்ட பிறகு தூக்கி எறியும் கழிவுப் பொருட்களை போடுவதற்காக பேருந்தின் இரண்டு பக்கத்திலும் பைகள் கட்டப்பட்டுள்ளது. ஆகவே கழிவுப் பொருட்களை அதில் போடுங்கள். அதுமட்டுமின்றி பயணத்தின்போது சில பேருக்கு குமட்டல், வயிறு பிரட்டுவது உள்ளிட்ட அசவுகரியமான தொந்தரவுகள் வரும். அப்படி எதுவும் இருந்தால் உடனே சொல்லுங்கள்.

புளிப்பு மிட்டாய், கவர்களெல்லாம் உள்ளது. அதை நீங்கள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம். இது நமது பேருந்து நாம் தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உங்கள் பயணம் இனிதாகவும் வெற்றிகரமாகவும் அமைவதற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பாகவும் இந்த பேருந்து ஓட்டுனர் மகேந்திரன் மற்றும் நடத்துனரான என் சார்பாகவும் வாழ்த்துகிறோம்” என கண்டக்டர் சிவண்முகம் கூறியுள்ளார்.