பிறந்தநாள் என்றாலே கேக் வெட்டுவது, காஸ்ட்லி கிப்ட் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், பெங்களூருவைச் சேர்ந்த அவிக் பட்டாச்சார்யா என்பவர், தனது காதலி சிம்ரனின் 26-வது பிறந்தநாளை மிகவும் வித்தியாசமாக மாற்றியுள்ளார். உடல்நலக் குறைவால் சிம்ரனால் திட்டமிட்டபடி ஓட முடியாமல் போகவே, அவருக்காக அவிக் களத்தில் இறங்கியுள்ளார்.
காதலியின் 26-வது வயதைக் குறிக்கும் வகையில், 26 கிலோமீட்டர் தூரத்தை ஓடியே கடந்துள்ளார் அவிக். இதில் ஹைலைட் என்னவென்றால், ஓடும்போது பாட்டு கேட்காமல், தனது காதலியின் ஆரோக்கியத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் மனதார வேண்டிக்கொண்டே இந்த தூரத்தைக் கடந்துள்ளார்.
View this post on Instagram
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகவே, “எந்தக் கோவிலில் வேண்டிக்கொண்டால் இப்படி ஒரு காதலன் கிடைப்பார்?” என பெண் நெட்டிசன்கள் ஏக்கத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இதுவரை 7.5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோ, “ரிலேஷன்ஷிப் கோல்ஸ்” (Relationship Goals) வரிசையில் இந்த ஆண்டின் டாப் ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளது.
