ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் எளிதான வெற்றியைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்ததாக கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்..

2023 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவும், இலங்கையும்  கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி  ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது.  இந்த அற்புதமான வெற்றியின் மூலம் டீம் இந்தியா பல சாதனைகளை படைத்தது.

பின்னர் கோப்பையை ரோஹித் சர்மாபெற்று அணியிடம் ஒப்படைக்க,அனைவரும் கொண்டாடினர். அதன்பின்   ரோஹித் சர்மா ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் எளிதான வெற்றியைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்த கேப்டன் ரோஹித், போட்டிக்குப் பிறகு, “ஆம், இது எங்களின் சிறப்பான ஆட்டம். இறுதிப் போட்டியில் இப்படி விளையாடுவது அணியின் மன வலிமையை காட்டுகிறது. பந்து வீச்சாளர்கள் எங்களுக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். மேலும் இந்த வெற்றியை பேட்ஸ்மேன்கள் கட்டமைத்தனர். நான் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்தேன், பந்து வீச்சாளர்களிடமிருந்து நான் பார்த்ததைப் பற்றி நான் பெருமைப்பட்டேன். முகமது சிராஜும், ஜஸ்பிரித் பும்ராவும் இந்த முறை துல்லியமாக வீசினர். எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்” என்றார்.

அணியின் வரலாற்று வெற்றி குறித்து ரோஹித் கூறும்போது, ​​“இந்த இறுதிப் போட்டியில் இது நீண்ட காலமாக நினைவில் இருக்கும். இந்தப் போட்டி இப்படி முடியும் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால் இவை அனைத்தும் இந்த வீரர்களின் திறமையைப் பொறுத்தது. அவர்களுக்கு  சிராஜிக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும். சிராஜ்  பந்தை காற்றில் ஸ்விங் செய்தார். இந்தப் போட்டியில் நாங்கள் ஒரு அணியாக 100 சதவீதத்தை வழங்கினோம், அதனால்தான் இந்த வெற்றியைப் பெற்றோம்.

ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், விராட் கோலி, கே.எல்.ராகுல் மற்றும் சுப்மான் கில் ஆகியோரின் பேட்டிங்கைப் பாராட்டிய ரோஹித் ஷர்மா, “நாங்கள் அனைவரும் இந்தியாவில் தொடரையும், அதன்பிறகு உலக கோப்பையையும் எதிர்பார்க்கிறோம். ஹர்திக் மற்றும் இஷான் அழுத்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் செய்த விதம், பின்னர் கேஎல் ராகுல் ஆட்டம். மேலும் விராட் கோலி சதம் அடித்தார். கில் பேட்டிங் செய்யும் விதம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இவை அனைத்தும் எங்கள் அணி எங்குள்ளது என்பதைத் துல்லியமாகக் காட்டுகின்றன” என்று கூறினார்.