சமூக ஊடகங்களில் பலர் தங்கள் ஸ்டைலை காட்ட முயற்சி செய்கிறார்கள். ஆனால், சில நேரங்களில் அந்த முயற்சிகள் வேடிக்கையான சிக்கல்களில் முடிவடைகிறது.   தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இதற்குச் சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த வீடியோவில், ஒரு இளைஞர் மிதிவண்டியில் சென்றபடியே ஸ்டண்ட் செய்யும் முயற்சியில், பரிதாபகரமாக சாலையில் விழுந்துவிடுகிறார்.

இந்த காட்சி இந்தியாவின் எங்கேயோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வீடியோவில், சாலையை இரண்டு பகுதிகளாக பிரிக்கும் ரோடு டிவைடரை  (road divider) அலேக்காக  கடக்க நினைத்த அந்த இளைஞர், ஒரு காலை தூக்கி, சைக்கிளுடன் அதை தாண்ட முயற்சிக்கிறார். ஆரம்பத்தில் அது என்னவோ சரியா நடந்திடுச்சி. ஆனால், ஒரு முயற்சியில் அவரது தவறாகி போய், கால் டிவைடர்ல  சிக்கி நேராக தடுமாறி சாலையில் விழுந்து விடுகிறார். இதை  பார்த்த நெட்டிசன்கள் சிரிப்பால் கமெண்டுகளை அல்லி வீசத்தொடங்கினர்.

 

View this post on Instagram

 

A post shared by hum nahi h (@atoz_comdey12)

“>

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @atoz_comdey12 என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ, 62,000-க்கும் அதிகமான லைக்குகளையும், வயரலான கருத்துகளையும் பெற்றுள்ளது. ஒரு பயனர், “நீங்கள் விதைப்பதை, நீங்கள் அறுவடை செய்வீர்கள்” என நக்கலாக கருத்து பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ மூலம், சமூக ஊடகங்களில் லைக்குகளுக்காகச் செய்யப்படும் விஷயங்கள், எப்போதும் வெற்றிகரமாக இருக்காது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. சாலையில் பயணம் செய்யும்போது, பாதுகாப்பே முதன்மை, ஸ்டைல் பின்னாளில் இருக்கலாம்..