சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு சாப் (Chaap) கடைக்காரர் தனது கடையின் முன்னால் ஒரு அறிவிப்புப் பலகையை வைத்துள்ளார். அதில், “சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டதால், சாப் விலையை உயர்த்திவிட்டோம்;
அரை பிளேட் சாப்-க்கு 10 ரூபாயும், முழு பிளேட்டிற்கு 30 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த வாடிக்கையாளர் ஒருவர், கடைக்குள் எட்டிப் பார்த்தபோதுதான் அந்த ‘ட்விஸ்ட்’ தெரியவந்தது. அந்தக் கடைக்காரர் சாப் வகைகளை கேஸ் அடுப்பில் சமைக்காமல், நிலக்கரி தணல் வீசும் தந்துரி அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தார்.
View this post on Instagram
உடனே அந்த வாடிக்கையாளர், “நீங்கதான் அடுப்புக்கரியில சமைக்கிறீங்களே, அப்புறம் எதுக்கு கேஸ் விலையை காரணம் காட்டி விலையை ஏத்துனீங்க?” எனக் கேள்வி கேட்க, அதற்குப் பதிலளிக்க முடியாமல் அந்தக் கடைக்காரர் சிரித்து மழுப்பிய வீடியோ இப்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் விலைவாசி உயர்வை சாமானிய மக்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதையும், அதைச் சிலர் எப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் இந்த வீடியோ நகைச்சுவையாகக் காட்டுகிறது.
