இந்தியாவில் சாலை விபத்துகள் பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.

இந்த நிலையில், சாலைப் பாதுகாப்பின் அபாயங்களைக் காட்டும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண்மணி தனது ஸ்கூட்டரை அதிவேகமாக ஓட்டிக்கொண்டு பரபரப்பான சாலையைக் கடக்க முயற்சி செய்கிறார். அப்போது, ஒரு சிறிய கவனக்குறைவால் விபத்தில் சிக்கி கீழே விழுவதைக் காண முடிகிறது.

கத்தில் சாலையின் நடுவில் சென்று தவறான பாதையை அடைகிறார். அப்போது, அவர் பல வாகனங்களைத் தவிர்த்துச் சென்றாலும், சாலையைக் கடந்து மற்ற பாதையில் செல்ல முற்படுகையில், வலது, இடதுபுறம் பார்க்காமல் கவனக்குறைவாகச் சாலையை வெட்டுகிறார்.

அப்போது, பின்னால் வேகமாக வந்த ஒரு லாரி அவரது ஸ்கூட்டரை மோதி விடுகிறது. இதனால், அந்தப் பெண்மணி ஸ்கூட்டியுடன் சட்டென்று கீழே விழுகிறார்.

அதிர்ஷ்டவசமாக, லாரி ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டதால் அவர் உயிர் பிழைத்தார். இந்தக் கவனக்குறைவான ஓட்டுதலைக் கண்டித்து, நெட்டிசன்கள் “இப்படியா வண்டி ஓட்டுவது சகோதரி?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.