இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகிறது. இதில் சிலர் வெளியிடும் வீடியோக்கள் விலங்குகள் மீதான அன்பை காட்டும். இந்நிலையில் தற்போது ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதாவது ஒருவர் நீர் யானையின் வாயில் பிளாஸ்டிக் பையினை திணிக்கிறார்.

இந்த சம்பவம் இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவா வனவிலங்கு சரணாலயத்தில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அந்த நபரின் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவை பார்த்த சிலர் இது மிகவும் அருவருக்கத்தக்க செயல் என்றும், வனவிலங்குகள் சரணாலயத்தில் இப்படி ‌ விலங்குகளுக்கு உணவளிக்க யார் அனுமதி கொடுக்கிறார்கள் என்றும் கோபத்துடன் பதிவிட்டுள்ளனர்.