தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மற்ற கட்சிகளில் உள்ள முக்கியப் புள்ளிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதில் அதிமுக படுவேகமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
புதிய நிர்வாகிகளுக்குப் பொன்னாடை போர்த்தி உற்சாகமாக வரவேற்ற இபிஎஸ், தேர்தல் பணிகளில் இப்போதே வேகம் காட்ட வேண்டும் என அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அடுத்தடுத்து நிர்வாகிகள் அதிமுகவில் இணைவது மற்ற கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
