
சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யஷீலாவை போனில் பேசியும் வீடியோக்கள் அனுப்பியும் ராம்குமார் என்பவர் தன்னுடைய காதல் வலையில் எப்படி வீழ்த்தினார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் ராமர் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலா கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவருக்கு திருமணம் ஆகவில்லை. சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிடுவது இவர் ஆர்வம் கொண்டவர்.
இவருடைய வீடியோவை பிடித்து லைக் கொடுப்பவர்கள் பெண்களாக இருந்தால் அவர்களிடம் அவராக சென்று பேசுவது வழக்கம். அப்படி லைக் கொடுத்தவர்களில் ஒருவர் சத்யஷீலா. சில நாட்களில் இவர் போலிஸ் இன்ஸ்பெக்டர் என்பதும், தனியாக வசித்து வருவதும் ராம்குமாருக்கு தெரிய வந்ததால் தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இன்ஸ்பெக்டர் சத்தியசீலாவோடு ராம்குமார் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்னொரு திருப்பமாக ராம்குமாரின் ரீல்ஸ் வீடியோவுக்கு மதுரை சேர்ந்த பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவரும் லைக் கொடுத்துள்ளார். அவரையும் ராம்குமார் தொடர்ந்து தகவல்களை அனுப்பி வைத்துள்ளார் .இதனை தொடர்ந்து அந்த பெண் அதிகாரியின் உத்தரவின் பெயரில் ராம்குமார் மதுரைக்கு கொண்டு சென்று விசாரித்ததில் அவர் ஏற்கனவே சில பெண்களை ஏமாற்றி மோசடி செய்த தகவல் தெரியவந்துள்ளது.
இதனால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் யாருக்கும் தெரிவிக்காமல் சத்தியசீலா தலைமறைவாகியுள்ளார். அதன் பிறகு சத்யஷீலா தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி சைபர் கிரைம் பிரிவுக்கு கூடுதல் பொறுப்பு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். புகார்களில் சிக்கி இருக்கும் இன்ஸ்பெக்டர் சத்யஷீலா இரண்டு பணிகளில் அதிகாரியாக நியமிக்கப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சூழலில் தான் ஸ்ரீவல்லிபுத்தூருக்கு தன்னோடு இருந் ராம்குமார் உடன் சென்றபோது ஏற்பட்ட தகரறில் நடந்த கொலையில் சிக்கி சிறை சென்றிருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.