
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வரும் நிலையில் கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் வீட்டிற்கு திரும்பி வரவில்லை .இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவியும் கேரளாவை சேர்ந்த வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமாகி காதலித்து வந்துள்ளனர். அந்த வாலிபர் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அங்கிருந்து கேரளாவுக்கு திரும்பியதும் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி அந்த பெண் மாலை வீட்டை விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வசித்து வந்துள்ளனர் மாணவியும் அந்த வாலிபரம் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதனால் அந்த மாணவியை கேரளாவில் இருந்து பெங்களூருக்கு போலீசார் மீட்டு வந்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி உள்ளார்கள். இதனையடுத்து மாணவியிடம் நடத்திய விசாரணையில் அந்த மாணவி காதல் கணவரோடு செல்ல இருப்பதாகவும் தனக்கு பதினெட்டு வயது நிரம்பி விட்டதாகவும் தாயுடன் செல்ல விரும்பவில்லை என்றும் கூறியதால் நீதிபதி இந்த மாணவியை கணவரோடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.