புதுச்சேரி மாநிலத்தில் பான்லே என்ற அரசு நிறுவனம் மூலமாக  பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அம்மாநிலத்திற்கு தினமும் 1 லட்சம் லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது. இருப்பினும்  உள்ளூர் பால் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 40 லிட்டர் மட்டுமே அந்நிறுவனத்திற்கு  கிடைக்கிறது. இதன் காரணமாக வெளிமாநிலங்களிலிருந்து கூடுதல் விலைக்கு பால் வாங்கப்பட்டு மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பால் கொள்முதல் விலையை ரூபாய்.3 உயர்த்தி அரசு அறிவித்தது. இந்நிலையில் தற்போது விற்பனை விலையில் லிட்டருக்கு ரூபாய் 4 உயர்த்தி உத்தரவு வெளியிட்டுள்ளது. அதாவது, ரூ.42ல் இருந்து ரூபாய் 46 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (ஜன.11) முதல் அம்மாநிலத்தில் அமலுக்கு வர இருக்கிறது