
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது மேற்கு மற்றும் வட மேற்கு நோக்கி நகர்ந்து வலுப்பெறும். அதன்பிறகு 2 நாட்களில் மேலும் வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரக்கூடும். பின்னர் ஓமன் நோக்கி சென்று வலு குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.