பஞ்சாப் மாநிலத்தில் குளிர்காலத்தில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்படுவதால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயிர்களை எரிப்பதாலும் தரமற்ற டீசல் புகையின் காரணமாகவும் அதிக புகைமூட்டம் நிலவுகின்றது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மூச்சு திணறல் போன்ற பல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்களுக்கு முன்னதாகவே பஞ்சாப் மாநிலத்தில் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தினங்களுக்கும் விடுமுறை அளித்து மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் புகை மூட்டத்தின் அளவை குறைக்க இந்த நான்கு நாட்கள் இடைவேளையை வழங்குவதாக அரசு தெரிவித்துள்ள நிலையில் மக்கள் அவசியமற்ற சூழ்நிலைகளில் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் தொழிலாளர்கள் மற்றும் தின கூலிகளின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் தொழிற்சாலைகள் இயங்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் முகமூடி அணிந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.