நம் நாட்டில் இன்று (ஏப்ர்ல்-1) முதல் புது நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அதன்படி இப்போது மஹாராஷ்டிராவில் குடியிருப்புதாரர்களுக்கான மின்கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் மின் விநியோக நிறுவனங்கள் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டி ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினர்.

இந்த மின்கட்டண உயர்வுக்கு ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இன்று முதல் மகாராஷ்டிராவில் மின்கட்டணம் 5 -10% வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அம்மாநிலத்தில் கடைசியாக 3 வருடங்களுக்கு முன் மின்கட்டணம் இதேபோல் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால் மின் பயனர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இப்போது கோடைக்காலம் நிலவி வருவதால் மின்நுகர்வு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இச்சூழலில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது மின் பயனர்கள் அதிக தொகையை செலுத்த நேரிடும்.