இந்தியாவின் சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகளானது பெரும்பாலும் அமெரிக்க டாலரை அடிப்படையாக கொண்டே இருக்கிறது. கச்சா எண்ணெய் உட்பட பல பொருட்கள் அமெரிக்க டாலரிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.

அதே நேரம் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வரும் நிலையில், அதற்கான வர்த்தகம் இந்திய ரூபாய் மற்றும் ரஷிய ரூபெல் மதிப்பில் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இந்தியா-மலேசியா இடையிலான வர்த்தக பரிவர்த்தனைகள் இனிமேல் இந்திய ரூபாயிலும் நடைபெறும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது இன்று தெரிவித்து உள்ளது.