பஞ்சாப் மாநிலத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு ஆளாகினர். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் மக்களின் மின் தேவையும் அதிகரித்தது. இந்நிலையில் அரசை மின் தேவையை குறைக்கும் நோக்கத்தில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைத்தது. அதாவது பகல் நேரங்களில் வெயில் அதிகரிப்பதற்கு முன்பாக அலுவலகத்தில் ஊழியர்கள் வேலையை முடித்துக் கொள்ளும் விதமாக காலை 7.30 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.

இந்த நடைமுறை ஜூலை 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அரசு அறிவித்த நிலையில் மீண்டும் பழைய நேரத்தையே கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து பழைய முறைப்படி அதாவது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு அலுவலகங்கள் வழங்க போல செயல்படும் எனவும் இந்த புதிய நடைமுறை ஜூலை 17ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.