சென்னை வில்லிவாக்கத்தில் புதிய மேம்பாலத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், தான் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட 9 பாலங்கள் குறித்து நினைவு கூர்ந்தார். சென்னையில் முதன்முறையாக அண்ணா பாலத்தை கருணாநிதி கட்டினார். இன்று அந்த பாலம் இல்லையெனில் என்ன ஆகியிருக்கும். அண்ணா இல்லன்னாவே நம்ம நிலை வேற நிலை, இந்த அண்ணா பாலம் இல்லன்னா என்ன நிலை ஏற்பட்டிருக்கும் என சூசகம் தெரிவித்தார்.

மேலும் தனது மிசா சிறை தண்டனை காலம் குறித்து மனம் திறந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். மிசா காலத்தில் என் மீது விழுந்த அடிகளை குறுக்கே வந்து தடுத்தவர் அண்ணன் சிட்டிபாபுதான். நான் இன்னமும் உயிரோடு இருக்கிறேன். உங்கள் முன்னால் முதல்வராக நிற்கிறேன் என்றால் அதற்கு சிட்டிபாபுதான் காரணம். அந்த நன்றி உணர்வோடுதான் அவரது பெயரை பாலத்துக்கு வைத்துள்ளேன் என உருக்கமாக பேசினார். 1976ல் ஸ்டாலின் மிசா சட்டத்தால் கைதானார்.