தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.

ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் 6 -12ம் வகுப்புக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் உலக குழந்தை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து இன்று காலை 11 மணியளவில் உறுதிமொழி எடுக்க வேண்டும். அது குறித்து மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதை ஈடுசெய்ய சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.