தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் இன்று காலை 10 மணிக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியின் படி மாதம் தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுகிறது. செப்டம்பர் முதல் தற்போது வரை 9 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில் 10வது தவணை தொகை இன்று வரவு வைக்கப்பட உள்ளது.