கடந்த மூன்று நாட்களாக தொழில்நுட்பப் பராமரிப்பு பணிகள் காரணமாக முடக்கி வைக்கப்பட்டிருந்த பாஸ்போர்ட் இணையதள சேவை இன்று காலை முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 8 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இந்த சேவை முடக்கப்பட்டிருந்தது. இதனால் பாஸ்போர்ட் தொடர்பான பல்வேறு பணிகளில் ஈடுபட விரும்பியவர்கள் சிரமப்பட்டனர்.

இந்த சேவை முடக்கப்பட்ட காலத்தில் நேர்காணல் திட்டமிடப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு, அடுத்த நேர்காணல் குறித்த தகவல் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.