மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த  மே 1ம் தேதிதொடங்கிய நிலையில் மே  9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே ஐந்தாம் தேதி நடைபெறும். இதனை பார்ப்பதற்காக பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் மதுரைக்கு வருவார்கள். லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படும்.

இதனை தடுக்க தமிழக அரசு சார்பாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்திற்கு வருவதற்கு அதற்கு உரிதான பாஸ் வாங்கினால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதிகாரிகள் மற்றும் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள்,அதிகாரிகளுக்கு தெரிந்தவர்கள் என பாஸ் இல்லாமல் எக்காரணம் கொண்டும் யாரையும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்திற்கு அனுமதிக்க கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.