
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை எச்டிஎப்சி வங்கி வெளியிட்டுள்ளது.
அதாவது எச்டிஎப்சி NEFT சேவைகள் இன்று இரவு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று இரவு 11.30 மணி முதல் நாளை காலை 6.45 மணி வரை NEFT மூலம் பணம் அனுப்ப முடியாது என்று வாடிக்கையாளர்களுக்கு HDFC குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. இதனிடையே UPI, IMPS, RTGS சேவைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.