உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் திருப்பதியில் கூட்டம் அலைமோதும். இதனால் இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் சூழல் ஏற்பட்டு வருகிறது. விஐபி தரிசனம் கட்டண தரிசனம் உட்பட பல்வேறு சிறப்பு தரிசனங்களுக்கும் அனுமதி அளித்து வருகிறது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று( 27ஆம் தேதி) விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஏனெனில் வரும் 27ஆம் தேதி பிரதமர் மோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை புரிகிறார் இதனை முன்னிட்டு அன்றைய தினம் விஐபி தரிசனங்களில் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது