
சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை அருகே வண்டிக்காரன் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக பிருந்தா தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் நாமக்கல்லில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிகண்டன் தனது நண்பருடன் ஒரு வேலையாக நாமக்கல்லுக்கு சென்றுள்ளார்.
அப்போது தனது மனைவி பிருந்தா ஒரு ஆண் நண்பருடன் வாகனத்தில் செல்வதை பார்த்துள்ளார். உடனே மணிகண்டன் அவர்களை வழிமறித்து தன்னிடமிருந்து ஸ்குரு டிரைவரால் பிருந்தாவின் தலையில் குத்திவிட்டார். இதனால் ரத்தம் வடிந்து பிருந்தா படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.