
இன்று திருச்சியில் திமுகவின் 15 மாவட்டங்களைச் சேர்ந்த முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு இன்று வருகை தந்தார். இந்நிலையில், பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்கும் 30,000 பேருக்கு சுடச்சுட மட்டன் பிரியாணி தயாராகி வருகிறது.
அதன்படி, 6000 கிலோ மட்டன், 4000 கிலோ சிக்கன், 40,000 முட்டைகளுடன் கமகமக்கும் அசைவ உணவு தயாராகியுள்ளது. மேலும், சமையலுக்கு 1200 கிலோ தக்காளி, 3000 கிலோ வெங்காயம், 600 கிலோ இஞ்சி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.