ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பார்..

அனில் கும்ப்ளே, ஒரு புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர், டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய 20 டெஸ்ட் போட்டிகளில் 111 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே சமயம் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் இடையேயான பிணைப்பு என்பது அனைவரும் அறிந்ததே. ஆஸ்திரேலியா டெஸ்ட் என்று வந்துவிட்டாலே அஸ்வின் அந்த அணி பேட்டர்களுக்கு சவால் விடும் விதமாக பந்துவீசுவார். அஸ்வின் 18 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் 2023 பார்டர்-கவாஸ்கர் டிராபி இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது.. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி (பிப்ரவரி 09 ஆம் தேதி) இன்று நாக்பூரில் தொடங்குகிறது. ஆஸ்திரேலியர்களுக்கு எதிரான 4 டெஸ்ட் கொண்ட சொந்தத் தொடரில், அனுபவம் வாய்ந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின்,  100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுக்க மீண்டும் ஒருமுறை தனது கையை சுழற்றத் தயாராக இருக்கிறார்.

36 வயதான அஸ்வினுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 18 டெஸ்ட் போட்டிகளில் 95 விக்கெட்டுகளை வீழ்த்திய முன்னாள் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கை விஞ்ச இன்னும் 6 விக்கெட்டுகள் தேவை. அனில் கும்ப்ளே, ஒரு புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர், டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய 20 டெஸ்ட் போட்டிகளில் 111 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிக்க 22 விக்கெட்டுகள் தேவை. மேலும் 100 விக்கெட்டுகளை அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கைப்பற்ற இன்னும் 11 விக்கெட் தேவை. இதனால் ஆஸ்திரேலிய டெஸ்டில் மிகப்பெரிய ரெக்கார்டு ஒன்றை அஸ்வின் படைக்கவுள்ளார்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் :

அனில் கும்ப்ளே –  111 விக்கெட் (20 டெஸ்ட்)
ஹர்பஜன் சிங் – 95 விக்கெட் (18 டெஸ்ட்)
ஆர் அஸ்வின் – 89 விக்கெட் ( 18 டெஸ்ட்)
கபில் தேவ் – 79  விக்கெட் (20 டெஸ்ட்)
ரவீந்திர ஜடேஜா – 63 விக்கெட் (12 டெஸ்ட்)