இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை என போற்றப்படும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மா, ‘பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கடுமையான சோதனையையும், அதிலிருந்து தப்பிய கதையையும் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணிக்கு வெற்றியை ஈட்டித்தந்த நாயகனாக திகழ்ந்தவர் திலக் வர்மா. ஆனால், இவ்வளவு துயரங்களைக் கடந்து அவர் இந்த நிலையைக் கண்டுள்ளார் என்பது பெருமூச்சை கிளப்புகிறது.

2022-ஆம் ஆண்டு இந்தியா ஏ அணிக்காக வங்கதேசத்தில் போட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, திலக் வர்மா ‘ராப்டோமயோலிசிஸ்’ எனும் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பேட்டிங் செய்வதற்கிடையே திடீரென கண் திறக்கமுடியாமல், கைகளின் இயக்கமும் நின்று , உடல் உறைந்ததுபோல் உணர்ந்துள்ளார்.

உடல் செயலிழந்த நிலையில், கைகளில் அணிந்திருந்த கையுறைகள் கூட வெட்டிக்எடுக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். மருத்துவர் கூறியதாவது – “இன்னும் சிறிது நேரம் தாமதமானிருந்தால், உயிரை இழந்திருக்க வாய்ப்பு அதிகம்.”

தனது உடல்நிலையை சரி செய்யாமல், இடைவேளையிலும் ஜிம்மில் கடுமையாக பயிற்சி மேற்கொண்ட திலக், உலகின் மிகுந்த ஃபிட்னஸ் கொண்ட வீரராகவும், சிறந்த ஃபீல்டராகவும் மாறவேண்டும் என்ற ஆசையுடன் ஓய்வையும் துறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் தசை நார்கள் உடைந்து, நரம்புகள் சிக்கித் திடீரென உடலின் பல உறுப்புகள் இயங்க மறுத்ததாக அவர் தெரிவித்தார். பிழைத்ததற்கான காரணமாக, ஆகாஷ் அம்பானி மற்றும் ஜெய் ஷா ஆகியோரின் துரித நடவடிக்கையை திலக் வர்மா தனது வாழ்க்கையின் முக்கியப் பகுதியாக கருதுகிறார்.

திலக்கின் உடல்நிலை மோசமடைந்தது குறித்து தகவல் அறிந்ததும், மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி உடனடியாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவைத் தொடர்பு கொண்டு, அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அவர்களின் ஒத்துழைப்பால் தானே உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் தப்பியதாகவும் திலக் வர்மா கூறுகிறார்.

“அவர்கள் இல்லையெனில் இன்று நான் இருப்பேனோ இல்லையோ என தெரியாது” என நெகிழ்ச்சியுடன் கூறிய திலக், இன்று இந்தியாவின் அடுத்த தலைமுறையைக் நம்பச் செய்யும் வீரராக திகழ்கிறார்.