கோட்டை வட்டாரத்தை உலுக்கப் போகும் அந்த மெகா ரிப்போர்ட்!” – பதவியேற்பின்போது சொன்ன வார்த்தையைத் தட்டாமல், தமிழகத்தின் நிதிநிலை குறித்த ‘வெள்ளை அறிக்கை’ இன்னும் இரண்டே வாரங்களில் அதிரடியாக வெளியாகப்போகிறது என்ற தகவல் ஒட்டுமொத்த அரசியல் களம் மற்றும் ஊடக வட்டாரத்தை அதிரவைத்துள்ளது!
புதிய த.வெ.க அரசு அமைந்ததும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதலமைச்சர் விஜய் ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது அந்தத் துல்லியமான அறிக்கை தயாராகி வருவதாகவும், விரைவில் அது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் நிதியமைச்சர் மரிய வில்சன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த கால ஆட்சிகளின் நிதி மேலாண்மை எப்படி இருந்தது என்பதை அக்குவேறாகப் பிரித்து மேயப் போகும் இந்த “ஹை-வோல்டேஜ்” வெள்ளை அறிக்கை, கோட்டை வட்டாரத்தில் இருக்கும் பல முக்கியப் புள்ளிகளுக்கு இப்போதே அடிவயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியுள்ளதுடன், தமிழக அரசியலில் ஒரு புதிய அரசியல் புயலையும் கிளப்பியுள்ளது!
