இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய அடையாள ஆவணமாகும். இது தற்போது அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் ‌ முக்கியமானஆவணமாக  திகழ்வதால் ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டால் அதனை அப்டேட் செய்து புதுப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் ஆதார் அட்டையை புதுப்பிப்பது அவசியம். இதற்கு வீட்டில் இருந்தபடியே ஆதார் அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in/என்ற ஆன்லைன் முகவரியில் அப்டேட் செய்யலாம். மேலும் இல்லை எனில் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று ரூ.50 கட்டணம் செலுத்தியும் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.