மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் விஜயகாந்த் வரலாறு பதிக்கப்பட்டுள்ளது நமக்கெல்லாம் பெருமை என்றார். அவரை மிஸ் செய்வதாக கூறிய ரஜினி, மதுரையில் பிறந்த மதுரை வீரன் விஜயகாந்த் என பெருமை தெரிவித்தார்.