உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப். அந்தவகையில் M4T எனும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை விரைவில் whatsapp, facebook, threads ஆகியவற்றில் Meta நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவின் மூலம் text to speech, speech to speech, text to text ஆக மாற்றி மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம். உலகத்தில் உள்ள 100 மொழிகளின் எழுத்துகளை (அ) குரலை நமக்கு தேவையான மொழியில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம் என Meta நிறுவனம் அறிவித்துள்ளது