உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப். அந்தவகையில் மெட்டா CEO மார்க் ஜுக்கர்பெர்க் வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தியை அறிமுகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஐஓஎஸ் சாதனங்களில் இனி பயனர்கள் வீடியோ செய்திகளை அனுப்பிக் கொள்ளும் வசதியை பெறலாம். இதற்காக சாட் பாக்ஸில் உள்ள மைக்ரோபோன் ஐக்கானை தொடுவதன் மூலம் இதற்கான பயன்பாட்டை  பெற முடியும். இதேபோல் வீடியோ கால் பேசும்போது பயனர்கள் தங்களின் திரைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஸ்கிரீன் ஷேரிங் அம்சமும் வெளியாகி இருக்கிறது