ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே வழங்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு 4 லிட்டராக உயர்த்த தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு மண்ணெண்ணெய் அளவை குறைத்ததாக கூறி, ஒருலிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி 4 லிட்டராக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் மண்ணெண்ணெய் அளவு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.